புதுச்சேரி ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் சார்பில் ரூ.1 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட நகராட்சி கழிப்பிடத்தை அமைச்சர் லட்சுமி நாராயண திறந்து வைத்தார்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட செஞ்சி சாலை மார்க்கெட் வளாகத்தில், புதுச்சேரி நகராட்சி மூலம் இயங்கும் கழிப்பிடம் செயல்பட்டு வந்தது. சரியான பராமரிப்பு இல்லாததாலும், கட்டிடம் சிதலமடைந்ததால் மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் கடந்த சில மாதங்களாக மூடிய நிலையில் இருந்த நகராட்சி கழிப்பிடம் புணரமைப்பு செய்யப்பட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு கழிவறையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments